

சாக்லேட் பேஸ் மாஸ்க்:
ஒரு பௌலில் 2 ஸ்பூன் சாக்லேட் பவுடரை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த சாக்லேட் பவுடர் ஃபேஷியல் சருமத்தின் ஈரப்பசையை மேம்படுத்துவதோடு, முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. அதோடு இது சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த சாக்லேட் ஃபேஷியலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
