பட்டுப்போன்ற முகத்திற்கு:
ஒரு வாழைப்பழத்தை எடுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி நன்றாக மசித்துக் கொண்டு, அதனுடன் நீங்கள் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கப்படாத வெண்ணையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்தப் பேக்கை ப்ரஷ் மூலமாகவோ விரல்களை கொண்டோ முகம் முழுதும் தடவிக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் முகத்தில் இருந்தால் போதுமானது. சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இதற்கு மேல் இருந்தால் தலைவலி வரலாம். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி பருத்தி துணியால் முகத்தை ஒற்றி எடுங்கள். முகம் நன்கு உலர்ந்த உடன் மாய்ச்சுரைசர் தடவிக் கொள்ளவும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் பளபளப்பான முகத்தைப் பெறலாம்.