ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு அரிசி, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் பச்சை பயிரை, போட்டு ஒருமுறை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் இந்த மூன்று பொருட்களையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்ததைக் காலையில் செம்பருத்தி அல்லது கறிவேப்பிலை அல்லது முருங்கைக்கீரை இலை இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு, அத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணையைக் கலந்து, இக்கலவையை தலைமுடியின் வேர்க்கால்களில் இருந்து தடவி நன்றாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் மைல்டான ஷாம்பு கொண்டு முடியை அலசினால், நம்ப முடியாத அளவிற்கு முடி ஒவ்வொன்றும் தனித்தனியாக அழகாக மென்மையாக இருக்கும். இந்தப் பேக்கை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்தினால் முடி நன்றாக அடர்த்தியாக வளரும்.