• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கார் கவிழ்ந்து பெங்களூர் தொழிலதிபர் படுகாயம்..,

வேடசந்தூர், மே.10-பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் தனஜெயன் (வயது 50) இவர் தனது காரை தானே ஓட்டிக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டு வந்தார்.

கார், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார் நகர் கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்ற பொழுத டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையின் தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரின் முன் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

காரை ஓட்டி வந்த டிரைவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.