மதுரை அருகே, சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில், அமைந்துள்ள கருப்புசாமி, காளியம்மன் மற்றும் பகவதி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுகுறித்து, திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்காக பாலாலாயம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, மதுரை நாகராஜன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகபூஜை நடத்தினர். இதைத் தொடர்ந்து, புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள கருப்புசாமி, காளியம்மன், பகவதி அம்மன் ஆகிய தெய்வங்களின் திருவுருவ படத்தில் பூஜைகள் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாச்சிகுளம் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.