• Wed. Dec 11th, 2024

பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைக்கப்பட்டது

ByKalamegam Viswanathan

Nov 29, 2024

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைக்கப்பட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலையில் உள்ள கேஎஃப்சி உணவகம் அருகே கடந்த வருடம் ஜனவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடிக்கம்பம் அமைத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் கொடியேற்றப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் நினைவாக கல்வெட்டும் அமைக்கப்பட்டது.

நேற்று இரவு திடீரென மர்ம நபர்களால் கல்வெட்டு உடைக்கப்பட்டு கொடிகள் அகற்றப்பட்டு இருந்ததை இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் இதனை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக SS காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.