

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். நயன்தாரா, சமந்தா நாயகிகளாக நடித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலரில்.. டபுள் மீனிங் வசனங்கள் நிச்சயம் ஒரு சர்ச்சையை கிளப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தணிக்கைக்குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளது.
