• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க மதுரையில் விழிப்புணர்வு..,

ByKalamegam Viswanathan

Feb 12, 2026

ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான ஒரு லட்சம் பெண்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக அரசு பள்ளியில்
படிக்கும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான ஒரு முஅனனெடுப்பாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டதயானது மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டில் ஏறு தழுவுதல் அரங்கில் வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.

இதில் 800 ஜல்லிக்கட்டு காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். சிறந்த காளைக்கு காங்கேயம் பசுமாடு கன்றுடன் வழங்க உள்ளனர். அதே போன்று மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் (KTM) பைக் வழங்கப்பட உள்ளனர். அதோடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து காலையில் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து 8 வருவாய் மாவட்டத்தில் வரும் ஜூன் மாதத்திற்குள் 09 வய்து முதல் 14 வரை உட்பட்ட இளம் பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு இருப்பதாகவும்

இதன் மூலம் எதிர்காலத்தில் பெண்கள் புற்றுநோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தியாவில் தற்பொழுது உள்ள கணக்கீட்டின்படி ஒரு நாளைக்கு 200 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறப்பது தெரிய வருகிறது. எனவே இதனை தடுப்பதற்காகவே 4000 ரூபாய் மதிப்பிலான ஊசியை இலவசமாக செலுத்த ரோட்டரி முடிவு செய்து உள்ளது என்றனர்.

அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒரு லட்சம் வளர் இளம் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டப்பட இருப்பதாக ரோட்டரி சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அதோடு தென் தமிழகத்தில் முதன்முறையாக கர்ப்ப பை வாய் புற்று நோய்க்கு முதன்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தடுப்பூசி செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.