• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு..,

ByKalamegam Viswanathan

Feb 12, 2026

மதுரை, கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூடோ மற்றும் வாள்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கும் மதுரை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் அமிர்தீன், யாசின், நபித் அஸ்லம், ஸ்டெய்ன்கமலேஷ் மற்றும் சிறப்பாக புத்தக மதிப்புரை செய்த மாணவர்கள் அப்துல் ரகுமான் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர்களை மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .எஸ்.தயாளன் பாராட்டினார். பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி மற்றும் உதவித் தலைமையாசிரியர் அல்ஹாஜ் முகமது வாழ்த்து தெரிவித்தனர்.