• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மொபைல் அடிமைத்தனம், போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு..,

BySeenu

Nov 26, 2026

மொபைல் போன் அடிமைத்தனம் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கோவையில் நடைபெற்ற ஆசம் வேர்ல்ட் ரெக்கார்ட் (Asam World Record) நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

பேர அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் (Para Academy Martial Arts) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பஞ்ச் மற்றும் பிளாக் (Punch & Block) பயிற்சிகளை மேற்கொண்டு சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் செந்தில்குமார் பரமேஸ்வரன் கூறியதாவது:

கடந்த 8 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளித்து வருகிறோம். கராத்தே மட்டுமின்றி சிலம்பம், வில்வித்தை (Archery), யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளிலும் மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.தற்போது நடைபெறும் ஆசம் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மணி நேரம் தொடர்ந்து பஞ்ச் மற்றும் பிளாக் பயிற்சிகளைச் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாகி வருவதும், இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி வருவதும் கவலை அளிக்கிறது. இதிலிருந்து குழந்தைகளையும் இளைய தலைமுறையினரையும் பாதுகாத்து, அவர்களை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்துவதே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகும்.எங்கள் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவர்கள் தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

ஆண்டுக்கு மூன்று முறை தேசிய அளவிலான போட்டிகளிலும், ஒருமுறை மலேசியாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.மேலும், ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உரிய பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகின்றன. விளையாட்டுத் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதன் பயனாக இதுவரை 6 மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து, தற்போது நல்ல வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.3 வயது முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. போளுவாம்பட்டி, சுந்தராபுரம், சிங்காநல்லூர், டைடல் பார்க் மற்றும் துடியலூர் 200 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அகாடமியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

குழந்தைகள் மொபைல் போன் பயன்பாட்டைக் குறைத்து, விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலைகளில் ஆர்வம் செலுத்த வேண்டும். அதேபோல், போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.இவ்வாறு பேர அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குநர் செந்தில்குமார் பரமேஸ்வரன் தெரிவித்தார்.