• Thu. Nov 26th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கார் விற்பனை மேளா வரும் 29-ம் தேதி வரை நீட்டிப்பு!

BySeenu

Nov 25, 2026

கோவை கொடிசியா மைதானத்தில் கோவை கார் டீலர்கள் சங்கத்தினர் இணைந்து நடத்தி வரும் பிரம்மாண்ட பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா, பொதுமக்களின் வரவேற்பைத் தொடர்ந்து வரும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை மேளாவில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்காக ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய ரக கார்கள் முதல் உயர்தர சொகுசு கார்கள் வரை பல்வேறு வகையான கார்கள் இடம்பெற்றுள்ளன.

கோவை மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கார்களைப் பார்வையிட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களின் வருகையும் ஆர்வமும் அதிகரித்து வருவதால், கூடுதலாக விற்பனைக்கான கார்கள் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

குறைந்த விலையில் தரமான பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க விரும்புவோர் தங்களது விருப்பம் மற்றும் பொருளாதார வசதிக்கு ஏற்ற கார்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டுத் தேர்வு செய்து வாங்கிச் செல்லும் வகையில் இந்த மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பழைய கார்களை மாற்றிக் கொள்ளும் வசதி, வாகன ஆவணங்களைச் சரிபார்க்கும் சேவை, வங்கிக் கடன் பெறுவதற்கான உதவி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க விரும்புவோர் வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனை மேளாவை நேரில் பார்வையிட்டு தங்களுக்குப் பிடித்த கார்களைத் தேர்வு செய்து பயன்பெறலாம் எனவும்,மேலும் தகவலுக்கு,
98422 20021, 98422 57147, 98422 45759. இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள ளனர்…