திண்டுக்கல்லில் இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு இயற்கை மற்றும் யோகா மருத்துவர் தனுஷ்யாதேவி இயற்கை மருத்துவம் மற்றும் உணவு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல் குமரன் திருநகர் நடைப்பயிற்சி மையத்தில் நடை பயிற்சி செய்யும் பயிற்சியாளர்களுக்கு யோகா, அக்குபஞ்சர் மற்றும் முளைக்கட்டிய பயிர்கள் தானியங்கள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

முளைக்கட்டிய தானியங்களை உண்ணும் போது செரிமானம் அதிகமாகும். புரதம் உடலுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் நார் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். இது உடல் எடையை குறைக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை அளவுகளை கட்டுப்படுத்தும் என எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் முளைக்கட்டிய தானியங்கள் நடை பயிற்சியாளர்களுக்கு இலவச உணவாக வழங்கப்பட்டது. பின்பு திண்டுக்கல் நூலகத்தில் நடந்த கருத்தரங்கில் இயற்கை உணவு குறித்து யோகா குறித்தும் இயற்கை மருத்துவர் தனுஷ்யாதேவி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று சிறப்பு செய்தனர்.







; ?>)
; ?>)
; ?>)