• Sat. Apr 26th, 2025

“ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா”

ByKalamegam Viswanathan

Feb 16, 2025

“ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா” மதுரை மாவட்டம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் விருது வழங்கும் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக மதுரை போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், டாக்டர் ஜெ.விக்டர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கூறி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். சமூக சேவகர் தங்க பாண்டி, நடிகர் அப்பா பாலாஜி, ஆர்.அப்துர் ரஹீம், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, சமூக சேவகியும், நடிகையுமான வனிதா, நடிகை மஹாலெட்சுமி ஆகியோர்க்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ரஜினி மன்ற தலைவர் பால தம்புராஜ், டக்கர் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பிரகல்யா, சமூக சேவகி தேவி பிரியா, கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், தயாரிப்பாளர் மருது பாண்டியன், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், நடிகர் திருநாவுக்கரசு மற்றும் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கு 105 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.