தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. மண்டல போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பள்ளியின் தாளாளர் சுதாகர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற இருக்கின்ற பல்வேறு கபடி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்றும், விளையாட்டு வீரர்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர்,இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் கபடி பயிற்சியாளர் தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற கபடி வீரர்களை பள்ளியின் பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.