வெளிநாடுகளில் உள்ளதைப் போல, சென்னையில் சோதனை அடிப்படையில் பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் நான்கு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் பணம் செலுத்தினால், தேவையான மதுபான வகை வந்துவிடும். 21வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே இந்த இயந்திரத்தின் மூலம் மதுபானம் பெற முடியும். அத்துமீறலைத் தடுப்பதற்காக இயந்திரத்தின் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் ஈடுபட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து, அதைத் தடுக்கவும் மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் இந்த மதுபான தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.