பொது அறிவு வினா விடைகள்
1.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?வெண்ணிப் போர்
குறள் 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.பொருள் (மு.வ):கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்
ஏரலில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்..!
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் இந்துஸ்தான் பெட்ரோல் பங்க் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமை தாங்கி வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கியும், பெண் ஊழியர்களுக்கு இலவச சேலை வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.…
விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகள் போராட்டம்..!
விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அருகே உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்ப நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கையில் கரும்புகளுடன் தரையில் அமர்ந்து படுத்துருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வானூர், காட்ராம்பாக்கம், புதுப்பாக்கம் உள்ளிட்ட…
திருச்சி மலைக்கோட்டை பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மூடல்..!
திருச்சியில் குடிநீர் குழாய் பணிகள் நடைபெறுவதால் மலைக்கோட்டை சுற்றியுள்ள 1500 வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதாள சாக்கடை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு உட்பட்ட சிங்காரத்தோப்பு, மலைவாசல்,…
அரசு பள்ளியில் மேஜை நாற்காலிகளை சேதப்படுத்திய மாணவர்கள் சஸ்பெண்ட்..!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் மேஜை, நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்திய மாணவ, மாணவிகளை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40…
ஈரானில் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம்..,
வெடிக்கும் மக்கள் போராட்டம்..!
ஈரானில் மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, அங்கு போராட்டம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.ஈரான் தலைநகரில் டெஹ்ரான் அடுத்த கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் அடுத்தடுத்து…
மதுரையில் ஆவின் பால் தாமதம்..,
பொதுமக்கள் அவதி..!
மதுரையில் இன்று காலை வழக்கம் போல் விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் தாமதமானதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.மதுரையில் தினம்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு 1. 80 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக மாற்றப்பட்டு மதுரை முழுவதிலும் விநியோகம்…
பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து.., மாணவ மாணவிகள் போராட்டம்..!
மதுரை மாவட்டத்தில் உள்ள எழுமலை கிராமத்தில், பள்ளி நேரங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள பள்ளிகளுக்கு எம். கல்லுப்பட்டி பகுதியில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். காலை 8: 30 மணி…
விவசாயிகளுக்கு 24மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்..,இபிஎஸ் வலியுறுத்தல்..!
விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை 24 மணி நேரமும் வழங்க வேண்டும் என திமுக அரசை அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே…



