மதுரை மாவட்டத்தில் உள்ள எழுமலை கிராமத்தில், பள்ளி நேரங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள பள்ளிகளுக்கு எம். கல்லுப்பட்டி பகுதியில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். காலை 8: 30 மணி முதல் 9 மணி வரை வரும் பேருந்துகள் கிராமங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து நேற்று காலை 8 45 மணிக்கு அய்யம்பட்டி பகுதியில் இருந்து வந்த டவுன் பஸ்சை சூலபுரத்தில் மறித்து மாணவர்களும் பெற்றோர்களும் 45 நிமிடம் போராட்டம் நடத்தினர். எழுமலை எம். கல்லுப்பட்டி ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. எஸ்ஐ மகாலிங்கம் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர்.