குறள் 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு பொருள்(மு.வ): பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 104 சதவீத வரி விதிப்பு
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலாகி உள்;ளது.அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரில் இதுவரை எடுக்கப்பட்ட…
தைவானில் இன்று காலை நிலநடுக்கம்
தைவான் நாட்டில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.தைவானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக தலைநகரான தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது, இது மக்களிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த…
இன்ஸ்டாகிராமில் சிறார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
16வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.மெட்டா நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளை தேவையில்லாத பதிவுகளில் இருந்து தடுக்கும் வகையில்…
உலக அளவில் 5ஆம் இடத்தைப் பெற்ற புரோட்டா
உலகின் தலைசிறந்த நூறு வகையான தெருவோர உணவுகள் பட்டியலில், புரோட்டா 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.புரோட்டா என்பது மைதாமாவால் செய்யப்படும் உணவாகும். இது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், நேபாளம், பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில்…
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்துள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்ததாவது.., தொடர்ந்து பேசிய ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, “உலகளாவிய வர்த்தகப் போரினால்…
மருதமலை கோவிலுக்கு மலைப்பாதை வழியாக காரில் செல்ல தடை
மருதமலை முருகன் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக காரில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் ஆறு படை வீடுகள் எவ்வளவு புகழ் பெற்றதோ, மருதமலை முருகன் கோவிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயிலை…
அங்கன்வாடி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இயங்கி வரும் குழந்தைகள் மையங்களில் தற்போது 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள்…
இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
தொடர்ந்து 2, 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று (புதன் கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து…
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் மறைவு
காங்கிரஸ் மூத்த தலைவரும், பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றியவருமான தகைசால் தமிழர் குமரிஅனந்தன் வயது மூப்பு காரணமாக நேற்றிரவு மரணம் அடைந்தார்.குமரி அனந்தன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவரும், சிறந்த பேச்சாளருமான ஒரு பன்முக ஆளுமை. அவர்…




