• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • உலக பட்டினி தினம் சாலமங்கலத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தவெக நிர்வாகிகள்..,

உலக பட்டினி தினம் சாலமங்கலத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தவெக நிர்வாகிகள்..,

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தங்குதடையின்றி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என தமிழக…

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில் திருத்தேரோட்டம்..,

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேனுகாம்பாள் உடனுறை ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் “நமசிவாய… நமசிவாய…” என பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து…

“தூய்மையான தாம்பரம் பசுமையான தாம்பரம்” திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சரத்குமார்..,

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி முழுவதும் “தூய்மையான தாம்பரம் – பசுமையான தாம்பரம்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பசுமைப்பணிகளை தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் தொடங்கி வைத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம்பரத்தை…

முதலமைச்சர் ஜோசப் விஜயின் டெல்லி பயணம் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சந்திப்பு..,

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று டெல்லி செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று காலை சென்னை பழைய விமான…

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் விவசாயி நியாயம் கோரல்..,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள இனாகல்பாளையம் கிராமத்தில் நிலம் தொடர்பான சர்ச்சை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆதிதிராவிடர் சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தகாத முறையில் மற்றவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை…

மதுரா கண்டிகையில் கங்கையம்மன் ஆலய திருவிழா..,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மதுரா கண்டிகையில் அமைந்துள்ள அருள்மிகு கங்கையம்மன் ஆலயத்தில் மூன்று நாள் திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது. விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, நல்லம்பாக்கம் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மகளிர் பால்குடம் எடுத்துச்…

குரோம்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாடு மக்கள் சாலை மறியல்..,

குரோம்பேட்டை பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை 27வது வார்டு, கோதண்டம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், நீண்டநாளாக குடிநீர்…

புகார்களுக்கு QR கோடு அடிப்படை வசதிகள் விரைவில் மேம்படும்..,

புதிய ஆட்சி தற்போது தான் அமைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படும் என பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தெரிவித்துள்ளார். பல்லாவரம் தொகுதியில் பொதுமக்களின் புகார்களை எளிதாக பெறுவதற்காக “QR கோடு” கொண்ட செயலியை அவர்…

கெட்டுப்போன குளிர்பானம் புகார் தெரிவித்த வாடிக்கையாளரை மிரட்டிய கடை உரிமையாளர்!

தாம்பரத்தை அடுத்த வாலாஜாபாத் ரோடு, தங்கவேல் நகர், மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு வரும் “ஜே கே ஹாட் பப்ஸ் அண்ட் டீ ஸ்டோர்” என்ற கடையில் குளிர்பானம் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர் அப்பொழுது அந்த குளிர்பானங்கள் கெட்டுப் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகள்…

மூலச்சேரி ஏரி ஆட்சியர் முன்னிலையில் ஒப்படைப்பு விழா…,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மூலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மூலச்சேரி ஏரி, CSR நிதியின் மூலம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் CSR நிதி ஆதரவுடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில்…