• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..,

ByPrabhu Sekar

Mar 6, 2026

ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை அடுத்த குரோம்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி பல்லாவரம் தெற்கு பகுதி தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் ரஜபூதீன் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சிந்தா மதார், பகுதி செயலாளர் சாதிக் ரப், பகுதி பொருளாளர் சையது முகமது, பகுதி துணை செயலாளர் செய்யது நவாபுதீன், அப்துல் ரகுமான், சுல்தான் முகமது மற்றும் ரபிக் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் எம். யாக்கூப் மற்றும் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி கலந்து கொண்டு இஃப்தார் நோன்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.

மேலும் வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே. ஜாகிர் உசேன், காயிதே மில்லத் நினைவு ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் மனிதநேய மக்கள் கட்சி பகுதி செயலாளர் தமீம் அன்சாரி நன்றியுரையாற்றினார்.