விருதுநகர் நகராட்சி குடிநீரேற்று குடோனில், இரும்பு குழாய்களை திருடியவர் கைது…..
விருதுநகர் நகராட்சி பகுதியான ராமமூர்த்தி சாலையில், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. அங்கு பழைய பொருட்களை இருப்பு வைக்கும் குடோனும் உள்ளது. நகராட்சியில் கேங்க் மஸ்தூராக வேலை பார்த்து வரும் முனியாண்டி (56) அங்கு வந்த போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி…
திருவில்லிபுத்தூர், மழை வெள்ளத்தால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள யாதவர் தெரு, சேடக்குடி தெருக்களில் வசிக்கும் மக்கள் கறவை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் ஏற்பட்ட பெருமழையால் இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பியது.…
காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி.., ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது…
தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய…
செங்குன்றம் 10வதுதெருவில் படம் எடுத்து நின்ற நல்ல பாம்பை பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர்…
திருப்பரங்குன்றம் அருகே செங்குன்றம் பத்தாவது தெருவில் நடுத்தெருவில் படமடுத்து நின்ற நல்ல பாம்பு. செங்குன்றம் பத்தாவது தெருவில் வசிப்பவர் கார்த்திக். நேற்று இரவு இவரது வீட்டிற்கு பால் ஊத்த வந்த நபர், இவரது வீட்டில் அருகில் வரும்போது சாலையின் நடுவில் நல்ல…
அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார். எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்…
திருவில்லிபுத்தூர் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து.., 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்ககுமார் (50). இவர் திருவில்லிபுத்தூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று அதிகாலையில் கடைக்குச் சென்ற முத்துராமலிங்ககுமார், கடைக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்து…
திருவில்லிபுத்தூர் அருகே, ரயில்வே சுரங்கபாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கிய பள்ளி வேன்…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள சிவகாசி சாலையில் இருந்து, அச்சம்தவிழ்த்தான் செல்லும் சாலையில், அத்திகுளம் கண்மாய் கரை பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சித்தாலம்புத்தூர், அத்திகுளம், அச்சம்தவிழ்த்தான், நாச்சியார்கோவில், அணைத்தலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு…
அலங்காநல்லூர் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா,…
மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் மேற்கூரை விழுந்து விபத்து… ஒரு சிறுமி, ஒரு அங்கன்வாடி பணியாளர் காயம்..,
மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 23 குழந்தைகள் பயின்று வரக்கூடிய நிலையில், 13 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு…








