• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருவில்லிபுத்தூர் பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து.., 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்…

ByKalamegam Viswanathan

Jan 4, 2024

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்ககுமார் (50). இவர் திருவில்லிபுத்தூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று அதிகாலையில் கடைக்குச் சென்ற முத்துராமலிங்ககுமார், கடைக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கடையை திறந்து பார்த்தார். அப்போது கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து உடனடியாக, திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் கடையில் வைத்திருந்த பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பழைய பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.