• Thu. Apr 25th, 2024

Jame Rahuman

  • Home
  • கை மற்றும் கால்களில் உள்ள கருமை அகல

கை மற்றும் கால்களில் உள்ள கருமை அகல

தயிருடன் கடலை மாவு, வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் கருமைகள் அகலும்.

முழங்கையில் உள்ள கருமை மறைய:

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசமமாக எடுத்து, அதனை பேஸ்ட் போல் கலந்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, ஊற வைத்து பின் மென்மையான சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதன் மூலம் முழங்கையில் உள்ள கருமை மறையும்.

முகச்சுருக்கம் மறைய:

தினமும் பாலுடன் 1ஃ2 துண்டு வாழைப்பழத்தைச் சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து விடும்.

முகம் பளிச்சிட:

வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேப்பிலை, வெள்ளிரி அரைத்த கலவையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து…

வசிகரிக்கும் அழகு பெற

பப்பாளி பழ சாறை, முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இமை முடிகளின் வளர்ச்சிக்கு

எலுமிச்சையின் தோல்களைச் சீவி, அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். அந்த எண்ணெயை, கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வர, இமை முடிகளின் வளர்ச்சி சீராகும்.

வெண்மையாக மாற

பாதி எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சாறு மற்றும் நான்கு டீஸ்பூன் சந்தன பொடியை ஒன்றாக கலந்து பயன்படுத்தினால், வெயிலில் சருமத்தின் நிறம் கருப்பாவதற்கு தீர்வு கிடைக்கும்.

தழும்புகள் மறைய

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளையோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிஇ தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.

புத்துணர்வுடன் இருக்க

செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால்…

கருவளையம் நீங்க

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொண்டு, அதைக் கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து, வெள்ளரிக்காயை அகற்றினால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையங்களும் நீங்கி விடும்.