• Sat. Apr 27th, 2024

Jame Rahuman

  • Home
  • கண் வீக்கத்தினைப் போக்க

கண் வீக்கத்தினைப் போக்க

கண்களில் ஏற்படும் வீக்கத்தினைப் போக்குவதற்கு ஈரமான தேயிலைத்தூள் பை, வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகியவற்றை கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் உடனடியான பலனை உணரலாம்.

அழகினைப் பெற

ஜாதிக்காய், மாசிக்காய், இலவங்கம் மூன்றையும் பொடி செய்து வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறை முகத்தில் போட்டு நன்கு தேய்த்துவிட்டுக் கழுவினால் முகத்தில் மாசு மருவற்ற அழகினைப் பெறலாம்.

துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெற

ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பெரிய துளைகள்…

தலை முடி ஆரோக்கியமாக

வெந்தயம் மற்றும் கடுகை ஊறவைத்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து அதனை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடிக்கு குளுமையும் ஆரோக்கியமும் கிட்டும்.

முடி உதிர்வு கட்டுப்படுத்த

கடுகு 100 கிராம், சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி நிலைக்கும்.

முகம் புத்துணர்ச்சி பெற

மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவி,…

நரைமுடி பிரச்சனை நீங்க

கறிவேப்பிலை கலந்த மோரைத் தலைமுடியில் தேய்த்து, அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையை மெதுவாக மசாஜ் செய்து தண்ணீரில் கழுவினால் சில நாட்களிலேயே நரைமுடி மறையும்.

குங்குமம் வைத்த தழும்பு மறைய

குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்படும். இவற்றை நீக்குவதற்கு, வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின் மீது பூசி வர தழும்பு மறையும்.

நகங்கள் வலுப்பெற

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

நகங்களை வெட்டும் முன்…

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.