• Sat. Apr 27th, 2024

Jame Rahuman

  • Home
  • ஆண்களின் முகத்தில் உள்ள கருமை நீங்க:

ஆண்களின் முகத்தில் உள்ள கருமை நீங்க:

உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்து, அதை பாதிக்கப்பட்ட கருமையான பகுதிகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும்.

வெடிப்பு மறைய

விளக்கெண்ணெய் சிறந்த முறையில் பாதங்களில் உள்ள வறட்சியை போக்கும். விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து பொடி செய்து போட்டால் கரைந்து விடும். இந்த கலவையை வெதுவெதுப்பான பிறகு பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும்.…

வடு மறைய

சிறிதளவு கசகசா, சிறிய மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள். பின்னர் பயத்த மாவினால்…

அம்மை தழும்பு நீங்க

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்க

பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து தடவுங்கள். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

எண்ணெய் பிசுக்கு நீங்க

ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் சந்தன பொடி மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, நீராகவும் இருக்க கூடாது. அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி…

பாத சுருக்கம் நீங்க

காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்

வெயிலினால் ஏற்பட்ட கருமை மறைய

மோர் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, நெற்றியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.

நெற்றி கருமை நீங்க

இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை அகன்றுவிடும். இது ஒரு சிறந்த முறையாகும். இதனை வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்யலாம்.

புண் குணமாக

தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்பட்டால், பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.