

செர்ரி, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்றாக பசை போல அரைக்கவும். இக்கலவையை முகத்தில் தடவி நன்றாகக் காயும் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனால் பக்க விளைவுகள் ஏதுமின்றி முகம் எப்போதும் பளபளப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்
