

வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேப்பிலை, வெள்ளிரி அரைத்த கலவையுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச்சிடும்.
