• Tue. Apr 23rd, 2024

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!..

Byமதி

Oct 26, 2021

தமிழக அரசு தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டு 1.07.2021 முதல் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை தீபாவளியை முன்னிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூட்டம் கடந்த 25ஆம் தேதி அன்று கானொளி வாயிலாக நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகளால் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட கூட்ட முடிவுகள், வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவெளியில், மத்திய அரசு 3% அகவிலைப்படி அறிவித்துள்ளதை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் 3% அகவிலைப்படியை மத்திய அரசுக்கு இணையாக அறிவித்து வரும் நிலையில் தமிழக அரசு தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டு 1.07.2021 முதல் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை தீபாவளியை முன்னிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம்.

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு பணப் பலனை விடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களுது தற்காலிக பணிநீக்கத்தை இரத்து செய்து, அவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

27, 28 & 29-10-2021 ஆகிய நாட்களில் உண்டியல் வசூலுடன் கூடிய பிரச்சார இயக்கத்தை நடத்தி 29.10.2021 உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதி, வரும் 7/11/2021 ஞாயிற்றுக்கிழமை விருதுநகரில் நமது மாநில செயற்குழு கூட்டத்தை நடத்துவது எனவும் முடியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 15 முதல் 20 வரையும், 22 முதல் 27வரையும் 2 வார காலம் மாநில நிர்வாகிகள் நான்கு குழுக்களாக பிரிந்து மாவட்டத்திற்கு ஒரு நாள் வீதம், தமிழகம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரச்சார இயக்கத்தை நடத்துவார்கள் எனவும், டிசம்பர் 4 ஆம் தேதி திருச்சி கோரிக்கை மாநாட்டிற்கு முதல் நாள் 3/12/2021 அன்று அனைத்து மாநில நிர்வாகிகளும் திருச்சி மாவட்டத்தில் பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கோரிக்கை மாநாட்டிற்கான வரவேற்பு குழு கூட்டத்தை நவம்பர் 28ஆம் தேதி அன்று திருச்சியில் கூட்டி நடத்துமாறு திருச்சி மாவட்ட மையத்தை கேட்டுக்கொள்வது எனவும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளை சிறப்பாக அமல்படுத்தி நமது அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகளை மிகவும் எழுட்சியோடு நடத்திடுமாறு மாநிலத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வியும், பொதுச்செயலாளர் ஜெ.லெட்சுமிநாராயணன் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *