கேரளாவில் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகம் உள்ளது.3 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் கல்வீசி இந்த தாக்குதலில் ஈடுபட்டது. இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மாவட்ட கமிட்டி அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை கைது செய்துள்ளனர்.அவர்கள் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த லால், சதீர்த்தியன்,ஹரிசங்கர் என தெரிய வந்தது. அவர்களை தாம்பனூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.