• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

70 வயதிலும் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த மூதாட்டி…

Byகாயத்ரி

Feb 19, 2022

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 31-வது வார்டில் மூதாட்டி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாக ஆம்புலன்சில் வந்து வாக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து ஓய்வு பெற்ற செவிலியர் அம்சா (70) தனியார் ஆம்புலன்சில் வாக்குச்சாவடிக்கு வந்து தன் ஜனநாயக கடமை ஆற்றினார்.