• Mon. Mar 17th, 2025

முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை இருமொழிக் கொள்கைதான்… எம்.பி. தங்க தமிழ்செல்வன் பேட்டி

ByP.Thangapandi

Feb 27, 2025

விஜய் பட டயலாக் மாதிரி பேசி வருகிறார், ஒரு நிர்வாகத்தின் பணி எவ்வளவு சிரமம் என்பது நிர்வாகத்திற்கு வந்தால் தான் தெரியும் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டி, பூதிப்புரம், ஒத்தப்பாறைப்பட்டி, தும்மக்குண்டு முதல் சேடபட்டி உள்ளிட்ட புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்.,

முதல்வர் இருக்கும் வரை இரு மொழிக் கொள்கை தான் தொடரும், மும்மொழி கொள்கை வர வாய்ப்பில்லை. மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு என்ன இடையூறு செய்தாலும் அதை சந்திக்க திமுக அரசு தயாராக இருக்கிறது.

விஜய் பட டயலாக் மாதிரி பேசி வருகிறார், ஒரு நிர்வாகத்தின் பணி எவ்வளவு சிரமம் என்பது நிர்வாகத்திற்கு வந்தால் தான் தெரியும். இரு மொழி கொள்கை தான் தமிழ்நாட்டின் பண்பாடு, காரணம் ஒரு மொழிக்காக உயிர் நீத்த பரம்பரை என்றால் தமிழ் பரம்பரை மட்டும் தான் வேறு எந்த நாட்டிலும் மொழிக்காக உயிரை விடவில்லை.,

தமிழுக்காக உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால் இரு மொழி கொள்கையில் தான் தொடர வேண்டும்.

தொகுதி வரையறை குறித்து 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார், நிச்சயமாக தொகுதிகள் இருப்பதை விட கூடுதலாக வாய்ப்பே தவிர குறைப்பதற்கான வாய்ப்பை விட மாட்டார்.

பேரறிஞர் அண்ணா காலம் முதல் விவரம் தெரிந்த காலம் வரை ஆங்கிலம், தமிழ் படித்த தமிழ் மக்கள் நன்றாக தான் இருக்கிறோம்.

இந்தியாவிலேயே இரண்டாவது கல்வி கற்ற மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது, இரு மொழியில் தான் சாத்தியமாகியுள்ளது போதும் மூன்றாவது மொழி ஒரு சுமை தேவையில்லை, மாணவர்கள் கஷ்டப்படுவார்கள் என்பது தான் எங்கள் எண்ணம்.,

5ஆம் தேதிக்கு பின் தொகுதி வரையறை குறித்து தெளிவான அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் கொடுப்பார், அதே போல் நாடாளுமன்றத்தில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழுவான ஒரு நிலைப்பாட்டை எடுப்போம் என பேசினார்.