மதுரை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை வரவேற்க திரண்ட ரசிகர்கள் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டதால் எரிச்சல் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் கூறுவதை சட்டை செய்யாத தொண்டர்கள் டிவிக்கு டிவி கே என கூச்சலிட்டனர் மேலும் பாதுகாப்புக்காக போலீசார் ஏற்படுத்தி இருந்த பேரிக்காடுகளில் ஏறி நின்றனர் மேலும் விமான நிலைய வெளிப்புறத்தில் தனியார் வாகன டாக்ஸி பாக்ஸ்கள் மீது ஆபத்தான முறையில் ஏறி நின்று கூச்சலிட்டனர் மதுரை விமான நிலைய வரலாற்றில் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதி மாநில முதல்வர்கள் மத்திய அமைச்சர்கள் வருகையின் போது எந்த வித கூச்சலும் குழப்பமும் இல்லாமல் இருக்கும் ஆனால் விஜய் வரும்போது ஏகப்பட்ட கூச்சலும் குழப்பமும் கட்டுப்பாடு இன்றி நடந்து கொள்கின்றனர்
மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் மைக் மூலம் கீழே இறங்கவும் ஒத்துழைப்பு கொடுக்கவும் பல்வேறு கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத விஜயின் ரசிகர்கள்.
தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இரவு 1.40 மணியளவில் மதுரை வந்தடைந்தார். நள்ளிரவிலும் விஜயை காண பெண் ரசிகைகள் உள்பட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர்.
தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த விஜய் பின்னர் கார் மூலம் திருச்செந்தூர் புறப்பட்டார் விஜயின் பாதுகாப்புக்காக விளாத்திகுளம் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் தூத்துக்குடி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் போலீசார் 2 வாகனங்களில் பாதுகாப்பாக பின் தொடர்ந்தனர்.

விஜய் வாகனம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முன்பே முற்றுகையிடுவது போல் சென்ற ரசிகர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் விஜ செல்லும் காரின் பின்னே ஆண்களும் பெண்களும் ஓடிக்கொண்டே இருந்தனர் இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர் திருச்செந்தூர் சென்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சத்ர சம்ஹார பூஜை நடத்தி முருகனை வழிபட்டார். முன்னதாக கடலில் இறங்கி காலை நனைத்த பிறகு பின் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டார். பட்டு வேஷ்டி மேல் துண்டு மட்டும் அணிந்து முருகனை வழிபட்டு பின் சென்னை திரும்பினார். விஜய் வருவதற்கு முன்பதாகவே திருச்செந்தூரில் நள்ளிரவு முதல் குழந்தைகள் முதல் பெரியவர்களை அதிக அளவு கூட்டங்கள் காணப்பட்டது.




