கழகத்தின் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் 101_வது பிறந்த தின கொண்டாடட்டங்கள் கன்னியாகுமரியில், புனித அலங்கார உபகார மாதா தேவாலயம் மற்றும் தமிழக விரைவு போக்குவரத்து சுங்க அலுவலகத்தின் சந்திப்பில். கலைஞரின் திருஉருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்விற்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குமரி அகஸ்தீசுவரம் ஒன்றிய செயலாளர் பாபு பங்கேற்று,கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் குமரி மாவட்டம் காங்கிரஸ் துணை செயலாளர் தாமஸ் மற்றும் கழகத்தின் பல்வேறு பொருப்பாளர்கள் ,ஆட்டோ சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் என கட்சியின் பல்வேறு பிரிவினர்களும் பங்கேற்றார்கள்.