கன்னியாகுமரியில் ஜூரோ பாய்ண்ட் என்ற பகுதி தான் காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரியில் முற்றுப்பெரும் தேசிய நெடுஞ்சாலையின் கடைசி பகுதி. இந்த பகுதியில் பல்வேறு சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் பகுதியாகவும் உள்ளது.
அதிகாலை நேரத்தில் கேரள அரசு பேருந்து பயணிகளை கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் இறங்கிய பின் ஜூரோ பாய்ண்டில் நிறுத்துவதற்காக வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் நூறடி சாலையில் ஜூரோ பாயிண்ட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா வாகனம் கேரள அரசு போக்குவரத்து பேரூந்தில் மோதிய வேகத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 4_பேர் படுகாயம் அடைந்த நிலையில். உடனடியாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறை விபத்து பகுதிக்கு வந்து கிரையன் மூலம் கர்நாடக சுற்றுலா வாகனத்தை விபத்து பகுதியில் இருந்து அகற்றி போக்குவரத்துக்கு ஒழுங்கு செய்த நிலையில். வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
