• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்…

Byமதி

Oct 22, 2021

சினிமா மற்றும் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். தற்போது கலா மாஸ்டர், நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தாவும், நயன்தாராவும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.