மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவரது தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காலை 6 மணி முதல் சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் புத்திர கவுண்டபாளையம் பகுதியில் உள்ள இளங்கோவன் வீட்டின் முன்பாக ஏராளமான அதிமுக கட்சித் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனிடையே சென்னையில் இருந்து சேலத்தில் உள்ள இல்லத்திற்கு திரும்ப முயன்றபோது, அவர்களில் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு உள்ளே நுழைந்து காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே புத்திரகவுண்டன்பாளையம் மெயின் சாலையில் தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்றொரு தொண்டர் வீட்டின் முன்பாக மண்ணெண்ணை உடன் வந்து அமர்ந்து இருந்தார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை பிடுங்கிக் கொண்டு அப்புறப்படுத்தினர்.