தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படை நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது.
இது நடந்து அடுத்த சில நாட்களில், புதுக்கோட்டை மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பலை மோதவிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. படகு கவிழ்ந்ததில் ராஜ்கிரண் என்கிற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி 40 நாட்களே ஆகியுள்ளன என்பது துயரம்.
உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.