• Thu. Apr 25th, 2024

சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசு தமிழ்நாட்டின் கலை, பண்பாடு கலாச்சாரம் முதலியவற்றை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வண்ணமும் ,அவர்கள் பழைய கலைகள் மறந்திடாத வண்ணம் மீண்டும் புதுப்பித்து இளைய சமுதாயத்திற்கு ஒரு எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் , பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


அதன் அடிப்படையில் சண்முகசுந்தரபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினமிருந்து நடைபெற்று வரும் கலைத் திருவிழாவில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா தலைமை தாங்கி வாழ்த்தி பேசி ,பரிசுகளை வழங்கினார் .தலைமை ஆசிரியர் ஜான்சன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜீவிதா, உப தலைவர் பிரியா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போலப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இந்த கலை திருவிழாவில் பல ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு பல கலை வடிவங்களை செய்து கொடுத்து மாணவ ,மாணவிகளை ஓவியா ஆசிரியர் பாலமுருகன் ஊக்கப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *