நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள பகுதியில் தெருவிளக்கு அமைத்து தராததால் மின் கம்பத்தில் தீ பந்தத்தை கட்டி எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்..
சேரங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்டசிங்கோனா கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தெரு விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை என கூறப்படுகிறது.இதன் சம்மந்தமாக சேரங்கோடு பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் கிராம மக்கள் மின் கம்பத்தில் தீ பந்தத்தை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.