• Mon. Mar 24th, 2025

சென்னையில் உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட ஏற்பாடு

Byவிஷா

Mar 10, 2025

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடுவதற்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 953, மூன்று சக்கர வாகனங்கள் 11 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்-09 என மொத்தம் 973 வாகனங்கள் சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது இவ்வாகனங்கள் 26.03.2025 அன்று காலை 10.00 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஏலத்திற்கான முன்பதிவு 19.03.2025 மற்றும் 20.03.2025 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர். 26.03.2025 அன்று காலை 10 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் தொகை மற்றும் புளுவு தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.