• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பழனி முருகன் கோயிலில் ஒரே நேரத்தில் 400 பேர் அமர்ந்து சாப்பிட ஏற்பாடு..,

ByS.Ariyanayagam

Aug 21, 2026

பழநி முருகன் கோயில் அன்னதான கூடத்தில் ஒரே பந்தியில் 400 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 2012-ல் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது.

இதுவரையில் ஒரு பந்தியில் 200 பேர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். நேற்று முதல் ஒரே பந்தியில் 400 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விரைவில் 500 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.