

குமரி மாவட்டம் மேல்கோதையாறு பகுதியில். தமிழக வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால்(ஜூன்_7)ம் தேதி மேல்கோதையாறு வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையை இறக்கிவிட்ட பின்னும், வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பகல், இரவு என தொடர்ந்து அரிகொம்பன் யானையின் ஒவ்வொரு செயலையும் கவனமாக கண்காணித்தனர்.
குமரி வனப்பகுதியில் இயற்கை அமைப்பு ரம்மியமாகவும்.அதே வேளையில் மேல் கோதையாறு பகுதியில் ஆங்காங்கே காணப்படும். அருவிகள், நீர் தேக்கங்கள் மற்றும் புல் நிறைந்த பகுதி என்பதால் அரிகொம்பன் ஒரு இயல்பு நிலையில் நடமாடியதுடன், யானையின் உடலில் இருந்த காயங்களும் ஆறிய நிலையில் அரிகொம்பன் ஒரு புதிய வனப்பகுதியில் இருப்பது போல் அல்லாமல் பழக்கப் பட்ட வனப்பகுதியில் இருப்பதை போன்ற நிலையில் இருப்பது குறித்து வனத்துறையினர் அவர்களது செய்தி குறிப்பில் தொடர்ந்து பதிவேற்றிக் கொண்டிருந்தனர்.
அரி கொம்பன் யானை அதன் தாய் மடியில் துயில் கொள்வது போன்று நல்ல தூக்கத்தை தொடர்வதும் அந்த அறிவிப்பில் இருந்த நிலையில்.
கடந்த வாரம் வனப்பகுதியில் வசிக்கும் காணி இன மக்களும், அவர் அவர்களது பகுதிக்கு விருந்தினராக வந்துள்ள அரிகொம்பனை கண்காணித்து வந்த நிலையில்.அரிகொம்பன் வரும் போது இருந்த தோற்றத்தில் இருந்து மெலிந்து உள்ளது என்ற தகவலின் மத்தியில்.
குமரியில் உள்ள விலங்குகள் ஆர்வலர்கள் தெரிவித்த ஒரு கருத்து. கேரளா மற்றும் தேனி வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த அரிகொம்பன் கிராம பகுதிகளில் உள்ள அரசின் அரிசி நியாயவிலை கடை மற்றும் பலசரக்கு கடைகளில் உள்ள அரிசியை விரும்பி உட்கொண்டதும் ஒரு பரவலான செய்தியாகவும், பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் அச்சத்தின் காரணமாகவும் தான் அரி கொம்பனை வனத்துறையினர் இடம் பெயர்த்தி . குமரி மாவட்டம் மேல்கோதையாறு வனப்பகுதியில் விட்டாலும், அதன் ஒவ்வொரு அசைவையும் இமை கொட்டாது கண்காணித்தே வந்தனர் என்பதை பாராட்டும் விலங்குகள் ஆர்வலர்கள் அரிகொம்பன் இளைக்க காரணம். அரிசியை விரும்பி உட்கொண்ட நிலையில், இப்போது மேல்கோதையாறு பகுதியில் புல்லை மட்டுமே உட்கொள்ளும் நிலையே காரணம். தளைகளையும் சேர்த்து உட்கொண்டிருந்தால் யானை இளைத்திருக்காது என்ற கருத்தினை தெரிவித்துள்ளனர்.

வனத்துறையினரும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டனர். வனத்துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரிக்கொம்பன் நலமாக, உற்சாகத்துடன் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இருப்பதையும், குமரி விருந்தினரான அரிகொம்பன் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக அந்த செய்தி அறிவிப்பில் தகவல்கள் உள்ளது.
