கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடல் பரப்பில், கடலோர பாதுகாப்பு குழுமத்தால் இன்றும், நாளையும் (ஜூன்_29 & 30.06.23) இரண்டு நாட்கள் சாகர்ஹவாச் பாதுகாப்பு ஒத்திகை. இன்று (ஜூலை_29) காலை.6 மணிக்கு சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு பணியில் கடலோர காவல் படையினர் இரண்டு குழுவாக பிரிந்து, பாதுகாப்பு ஒத்திகை பணிக்கு சென்றனர்.
கடலில் கடலோர படையினர் தீவிர வாதிகள் ஊடுருவல் உள்ளதா என்ற சோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
கடலில் கடலோர காவல் படையினரின் கண் காணிப்பது போல். கரையில் சட்ட ஒழுங்கு காவலர்களும் தீவிர வாதிகள் ஊடுருவல் உள்ளதா என்ற கண் காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடற் பரப்பு பகுதிகளிலும் சாகர் ஹவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.