மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர்கள் மூர்த்தி, மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் இணைந்து ஆய்வு நடத்தினார்.
2018 ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்துக்கு உள்ளான வீர வசந்தராயர் மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் பார்வையிட்டார்கள்.
மீனாட்சியம்மன் கோவிலில் வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட ஒதுவார் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு, கோவிலிலுள்ள யானை பார்வதியின் உடல்நிலை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு “2018ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தோம், கோவில் வளாகத்திலேயே வீர வசந்தராயர் மண்டப தூண்களின் சிற்ப பணிகள் மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும், 3 ஆண்டுகளுக்குள் மண்டபம் சீரமைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், அழகர்கோயில் மலை பாதையில் சாலையமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்,
மீனாட்சியம்மன் கோவிலிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய கருத்துரு உருவாக்கப்பட்டு வருகின்றது, கூடிய விரைவில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடத்தப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
தமிழகம் முழுதும் 188 இடங்களில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, ஆட்சிக்கு வந்தவுடன் 100 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு உள்ளது, இன்னும் 65 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டி உள்ளது.
அதேபோல் கோவிலுக்கு சொந்தமான கடைகளின் வாடகை அதிகமாக உள்ளது என பலர் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர், வாடகை நிர்ணயம் குறித்து முடிவு செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய ஆபரணங்கள் கடந்த 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட கோவில் கணக்கில் ஆபரணங்கள் வரவு வைக்கப்படும், சேதமடைந்த ஆபரணங்களை தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதில் வரும் வட்டியில் இருந்து கோவில் திருப்பணிகள் செய்யப்படும், 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் கோவில்களில் உள்ள தங்க, வெள்ளி பொருட்கள் ஆய்வு செய்யப்பட்ட உள்ளது, சட்டத்தின் ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நேர்மையாக, உண்மையாக நடத்தப்படும்” என கூறினார்.