

தமிழ்நாட்டில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை(மார்ச் 21) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை (மார்ச் 21) முதல் ஏப்.21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

