• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அதிமுகவை எதிர்த்து அண்ணாமலை அரசியல் செய்வது கானல்நீராக முடியும்.., முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜு பதிலடி..!

Byவிஷா

Mar 8, 2023

தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து அண்ணாமலை அரசியல் செய்வது கானல் நீராகத்தான் முடியும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து விலகும் பிரபலங்கள் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், பாஜகவினார் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அண்ணாமலை காரசாரமான பேட்டி அளித்த நிலையில் அதிமுகவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடும் வகையிலும் சில கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது அண்ணாமலைக்கு கானல் நீராகத்தான் முடியும் என்று தெரிவித்தார். மேலும் கூட்டணியை முடிவு செய்வது அண்ணாமலை கிடையாது என்றும், பாஜகவை பொறுத்த வரை எந்த முடிவையும் டெல்லி தான் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.