• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

குடிநீர் பிரச்சினை, கால்நடை மடிதல் என பிரச்சினைகள் இருக்கின்றது-டாக்டர்.கிருஷ்ணசாமி..,

BySeenu

Aug 10, 2026

கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் காட்ட கூடாது, கடந்த 3 மாதத்தில் 40 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்க வேண்டும். இந்த முறை குறுவை சாகுபாடி செய்ய முடியவில்லை , குடிநீர் பிரச்சினை, கால்நடை மடிதல் என பிரச்சினைகள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேகதாது அணையை கனவுதிட்டமாக செயல்படுத்த கர்நாடக முதல்வர் பார்க்கின்றார் அனைத்து கட்சி கூட்டம் நடத்துகின்றனர் எனவும், ஆனால் தமிழத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போதும் , அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என சொல்கின்றனர் என தெரிவித்தார்.

தமிழகத்திற்கு முன்பு 600 டி.எம்.சி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.30 லட்சம் ஏக்கர் விளைநிலம் இப்போது 3 லட்சமாக மாறி விட்டது எனவும் இப்போது
கர்நாடகத்தில் விளைநிலம் 30 லட்சம் ஏக்கராக மாறிவிட்டது.
தமிழகத்தில் 3 லட்சம் ஏக்கராக விவசாய நிலம் குறைத்து விட்டது என தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடத்த மறுத்து வருகின்றனர், ஆனால் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்துகின்றனர் என தெரிவித்தார். தொகுதி மறுவரையறை மக்கள் பிரச்சினையே இல்லை என தவெக சொல்லியது,இப் போது அனைத்து கட்சி கூட்டம் நடத்துகின்றனர் என தெரிவித்த அவர்,
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்தால் காங்கிரஸ் கட்சியும், அங்குள்ள ரசிகர்களும் வெறுப்பு கொள்வார்கள் என்பதால் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

வரலாற்று பிழையை விஜய் செய்து விடக்கூடாது, அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து கூட்டம் நடத்த வேண்டும் எனவும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிள் ஆகியோரை அழைத்து க் கொண்டு
பிரதமரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் , மத்திய அரசிடம் உத்திரவாத்த்தை பெறவேண்டும் , பிலிகுண்டுவில் தண்ணிதர திறத்து விடும் அதிகாரம்
நடுநிலையோடு இருக்கும் அமைப்பிடம் இருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் வரும் 16ம் தேதி அனைத்து கட்சி கூடி பேச இருக்கின்றோம்

தேர்தலுக்கு முன்பு வரை fair delimitation என்பதில் இருந்து காங்கிரஸ் பல்டி அடித்து தமிழகத்தில் delimitation தேவையில்லை என சொல்கின்றது என தெரிவித்த அவர்,
இது அகில இந்திய அளவில் கஙரகிரஸ் கட்சியின் நிலைப்பாடா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவில் , மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் மறுசீரமைப்பு நடைபெறும்,
அப்போது பாதிப்பு வரும், இதை தடுத்து நிறுத்த வேண்டாமா? என கேள்வி எழுப்பினார்.
காவிரி விவகாரத்திலும் குந்தகம், மறுசீரமைப்பிலும் குந்தகம் என தமிழக அரசு இருக்க கூடாது என தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் சட்டம் வரவில்லை என்றாலும் மறுசீரமைப்பு நடைபெறும் என தெரிவித்தார்.

மாஞ்சோலை பகுதி மக்களை வனத்தில் இருந்து வெளியேற்ற கூடாது , பல தலைமுறையாக அங்கு இருப்பவர்களை தொல்லை செய்ந கூடாது, மக்களை துன்புறுத்த கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும் காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பகைத்து கொள்ள கூடாது என்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டவில்லை என தெரிவித்த அவர், பாம்பும் சாகனும் ,தடியும் உடைய கூடாது என தமிழக அரசு செயல்படுகின்றது எனவும், காங்கிரஸ் கட்சிக்கு சிறு நெருக்கடி கூட வந்து விடக்கூடாது என நினைக்கின்றது என தெரிவித்தார். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தமிழக மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராகி விட்டது இந்த அரசு என தெரிவித்த அவர், தன்னுடைய நலன்,செல்வாக்கு போன்றவற்றிக்காக தமிழக நலனை விட்டிக்கொடுக்க தயாராகி விட்டனர் எனவும், தவெகவின் பலகீனத்தை காங்கிரஸ் பயன்படுத்தி கொள்கின்றது எனவும் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களை ஒன்று திரட்டி ஓரணியில் நிறுத்துவது என்பது அடிப்படை , அனைத்து கட்சி கூட்டம் நடத்தினால் என்ன குறைந்து போகும் ,
காங்கிரஸ் கட்சி உங்களை அழுத்துகின்றதா? என கேள்வி எழுப்பினார்.

தமிழ் தாய் வாழ்த்துக்கு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறித்த கேள்விக்கு, தமிழ் தாய் வாழ்த்துக்கு தனி தீர்மானம் ஏற்கனவே சட்டமன்றத்தில் பலமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். மனோன்மணியம் பல்கலை க்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்க வேண்டியதுதானே ?ஏன் இவர்கள் குனிந்து கொண்டு சென்றார்கள்? இந்த அரசு ஏன் அப்படி குனிந்து கொண்டு செல்கிறது ? எனவும் கேள்வி எழுப்பினார்.

பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது இதைத்தான் பாடுவோம் என சொல்ல வேண்டும் எனக்கூறிய அவர்,
மத்திய அரசு உடன் மோதல் போக்கு இல்லை என்றால் சரணாகதி அடைய தயாராக இருக்க வேண்டும் எனவும், தமிழ்தாய்வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை பார்த்து தான் சொல்ல வேண்டும்,
இதை எப்படி செயல்படுத்துகின்றனர் என்பதை பார்த்து தான் சொல்ல முடியும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு கவர்னர் வரவில்லை என்றால் என்ன செய்வார்கள்?
கவர்னர் இல்லாமல் நடத்துவார்களா என்ற கேள்விகள் இருக்கிறது, பொறுத்திருந்து அதை பார்க்கலாம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்..