


என் மண் என் மக்கள் அண்ணாமலையின் பாத யாத்திரை கன்னியாகுமரியில் இன்று முதல் (ஆகஸ்டு 15,17,18) என்ற தேதிகளில், குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்காக அண்ணாமலை நேற்று (ஆகஸ்டு_14)ம் தேதி இரவு கன்னியாகுமரி வந்து தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியவர்.
இன்று (ஆகஸ்டு 15)ம் நாள் காலையில் கன்னியாகுமரியில் உள்ள தேசப்பிதா அண்ணல் காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் மலர் மாலை வைத்து வணங்கிய அண்ணாமலை அடுத்து அந்த பகுதியில் உள்ள பாரதமாதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க உறுப்பினர் எம். ஆர்.காந்தி மற்றும் குமரியை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர்கள் பங்கேற்றனர்.


கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை வாகனத்தில் சென்றார்.தமிழக, கேரளம் எல்லை பகுதியான களியக்காவிளை புனித அந்தோனியார் தேவாலயம் முன் பாஜகவினர் பெரும் திரளாக கூடியிருந்தனர்.
இந்திய சுதந்திரத்தின் 77வது ஆண்டு தினமான இன்று களியக்காவிளையில் புதிதாக ஒரு கம்பம் நாட்டப்பட்டு அதில் அண்ணாமலை தேசிய கொடியை ஏற்றியதுடன். பாத யாத்திரை தொடங்கும் முன் தேசிய “கீதம்”பாடிய பின் குமரி மாவட்டத்தில் அவரது முதல் நாள் நடை பயணத்தை தொடங்கினார். களியக்காவிளை ஒரு முக்கிய சந்திப்பு பகுதி என்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டபோதும். காவல்துறை போக்குவரத்தை ஒழுங்கு செய்து ஊர்வலம் சென்றவர்களுக்கு இடையூறு ஏற்படாது பாதுகாப்பு மற்றும் கண் காணிப்பு பணியினை மேற்கொண்டனர்.பாஜகவின் பாதயாத்திரை காரணமாக போக்குவரத்து ஒன்றும் நிறுத்தப்படவில்லை.
களியக்காவிளையிலிருந்து 4_கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குழித்துறை நோக்கி சென்ற பாதயாத்திரை குழுவினரும், அண்ணாமலை, பொன்னார், முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதமும் படந்தாலு மூடு பகுதியில் சாலை ஓர டீ கடையில் டீ அருந்தினார்கள்.

பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் அவர்களது “தாமரை” கொடியை விட தேசிய கொடியை தான் அதிக எண்ணிக்கையில் பிடித்து சென்றனர்.
குழித்துறை பகுதியில் மதிய நேரத்தில் பொதுக் கூட்டத்துடன் இன்றைய முதல் நிகழ்வு நிறை வடைந்தது.
குழித்துறையிலிருந்து மாலை புறப்பட்டு பாதையாத்திரை அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாமியார் மடம் செல்கிறார்.அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை உரையாற்றவுள்ளார்.
அண்ணாமலையின் பாதயாத்திரையில்.இவர்களின் கூட்டணி கட்சியான அதிமுக வினர் எவரும் பங்கேற்கவில்லை.
பாதையாத்திரையின் வழி பயணத்தில் ஒரு இடத்தில் விவிலியத்தின் வசனம் அச்சிட்ட காகிதத்தை ஒருவரிடம் அண்ணாமலை கொடுத்தார். இந்த நிகழ்வில் உடன் பொன்னாரும், மாவட்ட தலைவர் தர்மராஜ் உடன் இருந்தனர்.
பாதயாத்திரையில் எடுத்து வந்த புகார் பெட்டிக்கு பெரிய வரவேற்பில்லாததை நடந்து சென்றவர்கள் அவர்கள் மத்தியில் அலசிக்கொண்டனர். முதல் நாள் பாதை யாத்திரையில் அண்ணாமலை நடந்த தூரம் 9_கிலோமீட்டர்கள். கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பாஜக சுவர் ஓட்டிகள் அதிகம் காணப்பட்டதில்.எதிர்வரும்(ஆகஸ்டு_20)ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் அதிமுக மாநாட்டு விளம்பர சுவரொட்டி கோளின் மீது பாஜகவினர் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.அதிமுக மத்தியில் ஒரு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதை காண முடிந்தது.


