

இந்திய சுதந்திரத்தின் 77 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தோவளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் ஊராட்சியில் சகாய நகர் சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சகாயநகர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் ஏஞ்சல் தலைமையில் நடைபெற்றது.
கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி அவர்களை சகாய நகர் ஊராட்சி மன்றம் சார்பில் சால்வை அணிவித்து மரக்கன்று கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம். பி சிறப்புரையாற்றி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கதொகை வழங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் தன்னார்வலர்கள், சமுக சேவகர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக இனிப்பு வழங்கப்பட்டு அனைவருக்கும் முருங்கை, மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், வட்டாரத் தலைவர் முருகானந்தம், ஓபிசி கிழக்கு மாவட்ட தலைவர் செல்வமணி, ஊராட்சி துணைத்தலைவர் ராஜம்முருகன், காங்கிரஸ் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் ராமமூர்த்தி, வார்டு உறுப்பினர்களும் அரசு அதிகாரிகள் தோட்டக்கலைத்துறை இயக்குநர், வேளாண்மை துறை துணை இயக்குநர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

