

ஆடி அமாவாசை தினத்தில் கடல் மற்றும் ஆற்று நீரில் மறைந்த பெற்றோர் ஏனைய உறவுகளுக்கு தர்பணம் செய்து அவர்கள் நினைவாக புனித நீராடுவது தொன்று தொட்டு தொடரும் நிகழ்வு.
இந்த ஆண்டு ஆடி மாதத்திலே கடந்த (ஜூலை_17)ம் நாளும், இன்றும் (ஆகஸ்டு_16)ம் தேதி என இரண்டு அமாவாசை வந்தது என்றாலும்.ஆடி மாத இறுதியில் வரும் அமாவாசையே சிறப்பானது என்ற பஞ்சாங்கம் குறிப்பை பின் பற்றி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று பொழுது புலரும் முன்னே ஏராளமான மக்கள். கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் தர்பணம் செய்த அரிசி,எள்ளு, பூக்கள் இவற்றை வாழை இலையில் பொதிந்து தலையில் வைத்தவண்ணம். மறைந்த உறவுகளை மனதில் நினைத்து கடலி நீரில் முழ்ங்கி பூஜை பொருட்களை விட்டு விடுவது என்ற அய்திகம் படி ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் இன்றும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நீராடினார்கள்.
கன்னியாகுமரி கடலில் வரும் அலை கூட்டம் போல்.கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தர்பணம் செய்யும் பூஜைகளை செய்யும் அய்யர்கள் இருக்கும் பகுதிக்கு மக்கள் செல்வதற்கும், தர்பணம் பூஜை செய்தவர்கள் கடல் பகுதிக்கு செல்வதற்கும் காவல்துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். சீர் உடை அணியாத காவலர்களும் கூட்டத்தை கண் காண்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கன்னியாகுமரியில் கடலில் புனித நீராடியது போல், குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் மக்கள் முன்னோர் நினைவாக பலி கர்ம புனித நீராடினார்கள்.

